இன்று (05/07/2022) அதிகாலை தமிழ் ட்விட்டர் சந்தில் கண்விழித்த இந்தியவாழ் ட்விட்டர்வாசிகளுக்கு ஒரு செய்தி கண்ணில் பட்டது. அது, ‘சவுக்கு சங்கர்’ ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டிருக்கிறது என்பதுதான்.
சவுக்கு சங்கர், பொதுவாகவே பல பக்கங்களிலும் கத்தி வீசுவார், அதில் எந்தக் கத்தி திருப்பித் தாக்கியது என்பது புரியவும், முழுமையாகவும் தகவல் வெளிவர சில மணி நேரங்கள் ஆனது.
சவுக்கு சங்கரின் ட்விட்டர் கணக்கு ஏன் முடக்கப்பட்டது என்பது பற்றிய விவரத்தை இங்கு பார்க்கலாம்.
சவுக்கு சங்கரின் ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டு பின்வருமாறு தான் பலருக்கும் தெரிந்தது.

“சவுக்கின் ட்விட்டர் கணக்கு இந்தியாவில் மட்டும் சட்ட ரீதியான கோரிக்கையால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
சட்ட ரீதியான கோரிக்கையின் அடிப்படையில் ட்விட்டர் கணக்குகளும், பதிவுகளும் நிறுத்தி வைக்கப்படுவது புதிது அல்ல, ஏற்கனவே இந்திய அரசு தரப்பிலிருந்து பலமுறை பல கணக்குகள் இப்படி முடக்கப்பட்டிருக்கின்றன. சவுக்கு சங்கர் ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டதற்கு காரணமான ட்விட்டரின் விதிகளைப் பற்றி கொஞ்சம் விளக்கமாகவே பார்க்கலாம்.

மரபார்ந்த அரசுகளுக்கு சட்டத் திட்டங்களும், சட்டத்தை உறுதிப்படுத்தும் அமைப்புகளும் இயங்குவதைப் போலவே, சமூக உடகங்களான, ஃபேஸ்புக், ட்விட்டர், யூ-ட்யுப் ஏன் டிக் டாக்கிற்கும் கூட இப்படியான சட்டவிதிகளும், அதனை உறுதிப்படுத்தும் அமைப்புகளும் இருக்கின்றன. இவற்றை Community Guidelines, Policies, Rules என ஒவ்வொரு பெயரிட்ட அழைப்பார்கள், இந்த விதிகள் பெரும்பாலும் அரசு சட்டதிட்டங்களுக்கு ஒத்திசைவாகவும், தனி நபர் உரிமைகளை மதிப்பதாகவுமே இருக்கும்.
உதாரணமாக, ட்விட்டரின் இந்த விதிகளின் தொகுப்புகளை நீங்கள் இங்கு பார்க்கலாம். ஃபேஸ்புக்கின் விதிகளை நீங்கள் இங்கே பார்க்கலாம்.
இவை போக, Copyright சட்டவிதிகளும் அதற்கான ஆட்டோமேட்டட் தொழில்நுட்பங்களும் கருவிகளும் இவர்களிடம் உண்டு.
இந்த சட்டவிதிகளை ஒருவர் மீறுவதாக நீங்கள் கருதினால், மீறப்படுவத நீங்கள் கண்டால் அவற்றை Report செய்யும் வசதிகளும் இந்தத் தளங்களில் உண்டு.
இந்த விதிகள் போக, இந்த சமூக ஊடக நிறுவனங்கள் ஒவ்வொரு நாட்டின் அரசுகளுடனும் அவர்கள் சட்டவிதிகளுடனும் இனைந்து ஒத்துழைக்கவும், அந்நாட்டின் சட்ட திட்டங்கள் அவர்களுடைய தளத்தில் மீறப்படும் போது அவற்றுக்குரிய நடவடிக்கை எடுக்கும் விதமாகவும் சில புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் அவற்றுக்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.
இவற்றின் அடிப்படையில் ஒரு ட்விட்டர் கணக்கு நிறுத்தி வைக்கப்படுவதற்கான ட்விட்டரின் விதிமுறைகளை முழுமையாக இங்கு பார்க்கலாம்.
இந்த சட்டரீதியான கோரிக்கைகளின் அடிப்படையில் நிறுத்திவைத்தல் இரண்டு விதமாக செயல்படுத்தப்படுகிறது.
- ஒரு குறிப்பிட்ட பதிவை மட்டும் நிறுத்தி வைப்பது.
- முழுமையாக ஒரு கணக்கையே நிறுத்தி வைப்பது.
இந்த நிறுத்தி வைத்தல், உலகளாவிய அளவிலும் நிறுத்தி வைக்கப்படும், அல்லது சட்ட ரீதியான கோரிக்கை வைத்த நாட்டில் மட்டும் நிறுத்தி வைக்கப்படும். சவுக்கு சங்கர் ட்விட்டர் கணக்கு அப்படி இந்தியாவில் மட்டுமே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வெளிநாடு வாழ் தமிழர்களால் சவுக்கு சங்கரின் முந்தைய ட்விட்டர் பதிவுகளைப் பார்க்க முடியும்.
Also Read : Isro Spy Case: மாதவனின் ‘Rocketry – The Nambi Effect’ படத்தின் உண்மைப் பிண்ணணி!
சட்டரீதியான இந்தக் கோரிக்கைகளை டிவிட்டருக்கு முறையிட என்றே ட்விட்டர் தனியான ஒரு பக்கத்தை நிர்வகிக்கிறது. https://legalrequests.twitter.com/
ஒரு புறம் இந்த விதிகள் ஒரு சமூக ஊடகம் ஆரோக்கியமாகவும் பாரபட்சமின்றி இயங்கவும் இத்தகைய விதிகளும் நடைமுறைகளும் தேவையானவை தான். ஆனால், இந்த விதிகளின் அடிப்படையில் பெரும்பாலான நேரங்களில் கருத்து சுதந்திரத்தை முடக்குவதற்காகவும் இவ்விதிகள் வளைக்கப்படுவதை நாம் கண்கூடாகவே பார்க்கிறோம்.
0 Comments