நிதின் கட்கரி

`யூடியூப் மூலம் மாதம் ரூ.4 லட்சம் வருமானம்’ – மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

கொரோனா சூழலைப் பயன்படுத்திக் கொண்ட விதம் பற்றியும் அப்போது நேரம் செலவிட்ட விதம் பற்றியும் மத்திய சாலைப்போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி பகிர்ந்துகொண்டார்.

நிதின் கட்கரி

மத்திய சாலைப்போக்குவரத்துத் துறை அமைச்சர் டெல்லி – மும்பை இடையிலான அதிவேக நெடுஞ்சாலை ஆய்வுக் கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டார். ஹரியானா மாநிலத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர், சாலைப் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார். இந்த நிகழ்ச்சியில் ஹரியானா முதல்வர் மனோகர்லால் கட்டார், லோக்சபா எம்.பி ராவ் இந்திரஜித் சிங், மாநில அரசின் மூத்த அதிகாரிகள், தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணைய அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

டெல்லி - மும்பை தேசிய நெடுஞ்சாலை
டெல்லி – மும்பை தேசிய நெடுஞ்சாலை

ரூ.95,000 கோடி செலவில் செயல்படுத்தப்படும் டெல்லி – மும்பை அதிவேக நெடுஞ்சாலைப் பணிகள் மார்ச் 2023-ல் நிறைவடையும் எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பாலான பணிகள் டெண்டர் விடப்பட்டு ஒப்பந்ததாரர்களுக்கு ஒதுக்கப்பட்டு விட்டது என்று அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். குருகிராம் அருகே உள்ள லோஹத்கி கிராமத்தில் நடந்து வரும் பணிகளையும் அவர் நேரில் ஆய்வு செய்தார். டெல்லி – மும்பை தேசிய நெடுஞ்சாலையில் ஹரியானா மாநில எல்லைக்குள் வரும் 160 கி.மீ நீள சாலைப் பணிகள் 2022 மார்ச்சுக்குள் முடிவடையும் என்றும் ராஜஸ்தான் மாநிலத்துக்குள் வரும் டெல்லி – தௌசா, வதோதரா – அங்கலேஸ்வர் இடையிலான சாலைப் பணிகளும் 2022-க்கும் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நிதின் கட்கரி
நிதின் கட்கரி

யூடியூப் வருமானம்!

நிகழ்ச்சியில் அமைச்சர் நிதின் கட்கரி மேலும் பேசுகையில், “கொரோனா ஊரடங்கு காலத்தில் நான் இரண்டு விஷயங்களைச் செய்தேன். ஒன்று வீட்டில் நானே சமைக்கத் தொடங்கினேன். இரண்டாவது, வீடியோ கான்ஃப்ரன்ஸ் மூலம் பல்வேறு தலைப்புகளில் உரையாற்றினேன். ஆன்லைனில் பல்வேறு உரைகளை நான் ஆற்றினேன். அந்த வீடியோக்கள் யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டன. அதிகப்படியான மக்கள் அந்த வீடியோக்களைப் பார்த்ததால், யூடியூப் இப்போது எனக்கு மாதம் 4 லட்ச ரூபாய் வழங்குகிறது’’ என்று பேசினார்.

மேலும், திருமணம் முடிந்த புதிதில் சாலைப் பணிகளுக்காக, தனது மாமனாரின் வீட்டை இடித்ததாகக் குறிப்பிட்ட அவர், இதுபற்றி தனது மனைவியிடம் கூட தெரிவிக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

Also Read – ஓமந்தூரார் மருத்துவமனை: தலைமைச் செயலக அரசியல்; தலைதூக்கும் இடமாற்ற விவகாரம்… பின்னணி என்ன?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top