“நம்ம ஊர்ல வில் ஸ்மித் ட்ரீட்மென்ட் யாருக்கெல்லாம் தரலாம்?”

Oscar மேடையில், வில் ஸ்மித் மனைவியின் உடல் குறைபாட்டைப் புரிந்துகொள்ளாமல் கிறிஸ் ராக் நக்கலடிக்க, அவரை வில் ஸ்மித் மேடையிலேயே ஓங்கி அடிக்க, கிறிஸ் அதை பொருட்படுத்தாமல் தொடர்ந்து தொகுத்து வழங்க, வில் ஸ்மித் சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றுக்கொண்டு பொதுவாக ஒரு முறை மன்னிப்புக் கேட்க, அகாடெமி கண்டனம் தெரிவிக்க, வில் ஸ்மித் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க என சோஷியல் மீடியா முழுக்க வீடியோவாகவும், மீம்களாகவும் வைரல் ‘வில் ஸ்மித்தின் ட்ரீட்மென்ட்’ தான்.

வில் ஸ்மித்தின் ட்ரீட்மென்ட்

வில் ஸ்மித்

வில் ஸ்மித்தே வன்முறை தப்புதான், அடிச்சது தப்புதான்… பகிரங்கமா மன்னிப்பு கேட்டாலும் “காதல் உங்களை பல கிறுக்குத்தனங்களை பண்ணச் செய்யும்”னு சொல்லிட்டுப்போயிட்டார். காதலே பல கிறுக்குத்தனங்களைப் பண்ணும் போது கடுப்பு அதுக்கும் மேல பல கிறுக்குத்தனங்களை பண்ண வைக்காதா என்ன…? அப்படி பொதுவெளியில் நமக்குக் கடுப்பைக் கிளப்பி, இவருக்கு வில் ட்ரீட்மென்ட்தான் சரியா இருக்கும்னு யோசிக்க வைச்ச சில பிரபல பிராப்ளங்களைப் பார்ப்போம்…

பயில்வான் ரங்கநாதன்

Bayilvan Ranganathan

திரைத்துறையின் திரைக்குப் பின்னால் நடக்கும் சம்பவங்களை வெளிச்சம் போட்டுக்காட்டுறேன்னு யூ-டியுபில் ஒரு கடையைத் தொறந்து கிசு கிசுவா பேசிகிட்டுத் திரியுறவரு தான் பயில்வான் ரங்கநாதன். அவருடைய கொச்சையான, பச்சையான ஆபாச வாய் மொழியும், கடுப்பைக் கிளப்பும் உடல்மொழிக்கும் சம்பந்தப்பட்ட திரைபிரபலங்கள் மட்டுமல்ல, பாக்குற பல பேருக்கே கடுப்பு பொங்கிட்டுதான் வருதாம்.

பிராங்க்ஸ்டர் ராகுல்

Kuppaikaran Prank | Prankster Rahul | Tamil prank | PSR 2020 - YouTube

ஊருக்குள்ள எத்தனையோ பிராங்க் சேனல் இருந்தும், இவங்கிட்டயா மாட்டினோம்னு பிராங்க் பண்ணப் பட்டவங்க நொந்துப் போற அளவுக்கு பிராங்க் பண்ணி கொலையா கொண்ணு எடுப்பாரு பிராங்ஸ்டர் ராகுல். கவுண்டமணியே தேவலாம்னு சொல்ற அளவுக்கான உருவக்கேலி செய்யக்கூடிய ஒருத்தர் தான். போனவாரம் தான் ஒரு பாட்காஸ்ட் கேட்டுகிட்டிருக்கும் போது ஒருத்தர் சொன்னாரு, ’பிராங்ஸ்டர் ராகுலை பார்த்தா ஒரு நொடிகூட யோசிக்காம சப்புன்னு அரைஞ்சுட்டு, பிராங்க் பண்ணோம்னு சொல்லிரனும்’னு சொல்லிகிட்டிருந்தாரு. வன்முறை தப்புதான், பிராங் பண்றதும் தப்பு, அதைப் பண்ணக்கூடாதுனு சட்டமெல்லாம் போட்டாங்களே… என்ன பண்றது…

இவர் மட்டுமல்ல, நம்மூர்ல பிராங்க் பண்ற பலருக்கும் ‘வில் ஸ்மித்தின் ட்ரீட்மென்ட்’ தேவைப்படுதோன்னு தோணுது.

அபிஷேக் aka சினிமாப் பையன்

Abishek Raaja

யூ-டியுபில் இருந்து பிக்பாஸ் வரைக்கும் போன பிரபலம்… பேட்டி எடுக்கும் போதே ஆர்கஸமடைஞ்சு பேட்டி குடுக்குறவரையே நெளிய வைப்பாரு… IELTS சிலபஸ்லயே இல்லாத புதிய புதிய ஆங்கில வார்த்தைகளைப் போட்டு Spell bee குழந்தைகளையே அசர வைப்பாரு… சசி தரூருக்கு இவர் வீடியோவைப் போட்டுக்காட்டினா, அவரே நம்ம அண்ணன் யூஸ் பண்ற எக்ஸ்ட்ராவேகண்ட் மேன்பூமரண்ட் வார்த்தைகளைக் கண்டு காண்டாகி ‘வில் ஸ்மித்தின் ட்ரீட்மெண்ட்’ கொடுத்துருவாரு.

Also Read : OSCRAS 2022 வின்னர்ஸ் பத்தி எந்தளவுக்குத் தெரியும்.. ஒரு சின்ன டெஸ்ட்ல கண்டுபிடிக்கலாம் வாங்க!

ராதாரவி

Radha Ravi

ஊருக்குள்ளாற பூமர் அங்கிள்கள் நாலு பேரு கிடைச்சிட்டா என்ன பேசுறோம், ஏது பேசுறோம்னு தெரியாம பெருமைஇ பேசிகிட்டு திரிவாங்கல்ல, அந்த மாதிரி பழம்பெருமை பேசுறேன்னு விவஸ்தை இல்லாம எதையாவது உளறிக்கொட்டுவாரு… ஒருமுறை ஷூட்டிங்ல ஒரு சின்னக் குழந்தைக்கு கொடுமை பண்ணதைப் பத்தி பெருமையா பேட்டி கொடுத்திருப்பாரு… நடிகைகளைப் பற்றி கேவலமான உடல்மொழியுலயும், தகாத வார்த்தைகளையும் பேசிகிட்டிருப்பாரு… நமக்கு கடுப்பாதான் இருக்கும்… ஆனா, என்ன பன்றது…?

வேற யாருக்கு வில் ஸ்மித் ட்ரீட்மென்ட் தரலாம்?

வில் ஸ்மித்

Click bait வெறி கண்ணையாக்களான பல யூடியூப் சேனல்கள், நாலு மாசம் முன்னாடி பார்த்தப்போ எந்த சீன் ஓடுச்சோ, அதே சீன் ஓடுற டிவி சீரியல்கள், பேக் ஐடிகளுக்கு ஹார்டின்களை அள்ளித்தெளிச்சு ஏத்தி விடுற ஆல்பர்பஸ் அங்கிள்கள் என ஊருக்குள்ள பல பேரைப் பார்த்து காண்டாகுதுதான்… ‘வில் ஸ்மித்தின் ட்ரீட்மென்ட்’ தேவைப்படுதுன்னு தோணுது தான்… ஆனா, ‘காந்தி மகான்’ என்ன சொல்லிருக்காரு… ஊருக்குள்ளாற பெட் ரோல் விலை ஏறிக்கெடக்கு… போய் பொழப்ப பாப்போம்.

5 thoughts on ““நம்ம ஊர்ல வில் ஸ்மித் ட்ரீட்மென்ட் யாருக்கெல்லாம் தரலாம்?””

  1. Link pyramid, tier 1, tier 2, tier 3
    Level 1 – 500 links with integration contained in writings on article domains

    Tier 2 – 3000 web address Forwarded connections

    Tier 3 – 20000 references assortment, comments, writings

    Utilizing a link structure is helpful for online directories.

    Need:

    One reference to the domain.

    Keywords.

    True when 1 key phrase from the resource topic.

    Observe the complementary feature!

    Crucial! Tier 1 references do not coincide with Secondary and 3rd-order links

    A link hierarchy is a device for enhancing the flow and inbound links of a internet domain or social media platform

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top