Wikipedia

விக்கிபீடியா பற்றிய சுவாரஸ்யமான 11 தகவல்கள்!

உலக அளவில் அதிக மக்களால் பார்வையிடப்படும் ஆன்லைன் வெப்சைட்டுகளில் விக்கிபீடியா முதன்மையானது எனலாம். விக்கிபீடியாவில் தேடினால் கிட்டத்தட்ட அனைத்து விஷயங்களும் நமக்குக் கிடைக்கும். ஜனவரி 15, 2001-ம் ஆண்டு லாஞ்ச் செய்யப்பட்ட இந்த வெப்சைட் தன்னுடைய 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளன. இன்னும் காலத்துக்கு ஏற்ப தகவல்கள் விக்கிபீடியாவில் அப்டேட் செய்யப்பட்டு வருகின்றன. விக்கிபீடியாவில் தகவல்கள் தொடர்பான நம்பகத்தன்மை கேள்விக்குறியாக இருந்து வரும் போதிலும் உலக நாடுகளில் உள்ள மக்கள் இதனை தொடர்ந்து பயன்படுத்திக்கொண்டுதான் இருக்கின்றனர். ஜிம்மி வேல்ஸ் மற்றும் லாரி சங்கெர் ஆகியோரால் உருவாக்கப்பட்ட விக்கிபீடியா பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் இங்கே…

Wikipedia
  • விக்கிபீடியாவனது தற்போது 300-க்கும் மேற்பட்ட மொழிகளில் 55 மில்லியனுக்கும் அதிகமான கட்டுரைகளைக் கொண்டுள்ளன. அவற்றில் ஆங்கிலத்தில்தான் அதிகமான கட்டுரைகள் உள்ளன. ஒவ்வொரு மாதமும் சுமார் 2,80,000 எடிட்டர்கள் விக்கிபீடியாவிற்கு தங்களது பங்கினை அளித்து வருகின்றனர்.
  • போலந்து நாட்டில் உள்ள ஸ்லபிஸ் பகுதியில் விக்கிபீடியாவுக்கு என நினைவுச்சின்னம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை அர்மேனியாவைச் சேர்ந்த சிற்பி மிஹ்ரான் ஹகோபியன் என்பவர் வடிவமைத்துள்ளார். பிராங்ஃபர்ட் நகரத்தில் அக்டோபர் மாதம் 2014-ம் ஆண்டு இந்த சிற்பம் வெளியிடப்பட்டது.
  • சுற்றுலாத்துறையில் விக்கிப்பீடியா முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது. இத்தாலிய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளதன்படி, டிஸ்டினேஷன் மற்றும் சிட்டீஸ் பற்றிய தகவல்கள் விக்கிபீடியாவில் அதிகம் சேர்க்கப்பட்டால் சுற்றுலாத் தளங்களில் இரவு நேரங்களில் தங்கும் பயணிகளின் எண்ணிக்கை 9% அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
  • உலக அளவில் அதிகம் பார்வையிடப்படும் 10 வலைதளங்களில் விக்கிபீடியாவும் ஒன்று. இலாப நோக்கற்ற அமைப்பால் நடத்தப்படும் உலகின் ஒரே பெரிய வலைதளமும் விக்கிபீடியாதான்.
  • விக்கிபீடியாவுக்கு 7 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கடந்த ஆண்டு நன்கொடை அளித்து தங்களது ஆதரவைத் தெரிவித்தனர். இந்த ஆண்டு இன்னும் அதிகமான மக்கள் நன்கொடை அளிப்பார்கள் என விக்கிபீடியா அதிகாரிகளால் நம்பப்படுகிறது.
  • ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதிலும் உள்ள விக்கிபீடியா பங்களிப்பாளர்கள் `விக்கி லவ்ஸ் மானுமன்ட்ஸ்’ என்ற புகைப்படப் போட்டியில் பங்கெடுக்கின்றனர். 2010- ம் ஆண்டு முதல் 40-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 60,000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் சுமார் 1.7 மில்லியனுக்கும் அதிகமான புகைப்படங்களை விக்கிபீடியாவுக்கு வழங்கியுள்ளனர். 2020-ம் ஆண்டும் கொரோனா பாதுகாப்பு வழிகாட்டுதலின் கீழ் இந்தப் போட்டி நடத்தப்பட்டது.
  • விக்கிபீடியாவுக்கு பங்களிக்கும் நபர்கள் விக்கிபீடியன்ஸ் என்று அழைக்கப்படுகின்றனர். விக்கிபீடியாவில் ஒவ்வொரு கட்டுரையும் திருத்தப்படுவதற்கான வரலாறு வெளிப்படையாக காண்பிக்கப்படும். படிப்படியாக ஒவ்வொரு கட்டுரையும் எவ்வாறு எழுதப்பட்டது என்பதை இதன் வழியாக நீங்கள் காண முடியும். எல்லா இடங்களில் இருந்தும் தகவல்களை சேமித்து எழுதுவது மிகவும் சவாலான விஷயம். விக்கிபீடியன்ஸ் தங்களது கட்டுரைகளை விக்கிபீடியாவின் விதிகள் மற்றும் வழிகாட்டுதல்களின் கீழ் எழுதுகிறார்கள். விக்கிபீடியாவில் சுமார் 33 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தங்களுடைய பெயர்களை பதிவு செய்துள்ளனர்.
  • முதன்முதலாக விக்கிபீடியாவில் எழுதப்பட்ட கட்டுரைகளில் `பூடில்’ பற்றிய கட்டுரையும் ஒன்று. பூடில் என்பது ஒரு நாய் இனம். பூடிலுக்கான ஆங்கில விக்கிபீடியா பக்கத்தில் தற்போது 6000-க்கும் அதிகமான சொற்கள் உள்ளன. பூடில் தொடர்பான பிற நாயினங்களின் பெயர்களும் இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ளன.
  • விக்கிபீடியாவில் வினாடிக்கு 10-க்கும் மேற்பட்ட திருத்தங்கள் செய்யப்படுகின்றன. அதாவது ஐந்து நிமிடங்கள் ஒரு கட்டுரையை நீங்கள் படித்து முடிக்கும் நேரத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட திருத்தங்கள் செய்யப்படுகின்றன. அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு நாளும் சராசரியாக சுமார் 600 புதிய கட்டுரைகள் பெறப்படுகின்றன.
  • தி ஈகிள்ஸின் ஹோட்டல் கலிஃபோர்னியா’ பாடலை அடிப்படையாகக் கொண்டு wikipediaholics-க்காகஹோட்டல் விக்கிபீடியா’ என்ற தீம் சாங் 2004-ம் ஆண்டு வெளியிடப்பட்டது.
  • விக்கிபீடியாவின் பிரதான பக்கத்தை தவிர்த்து ஒரே நாளில் அதிகம் பார்வையிடப்பட்ட கட்டுரை ஆப்பிள் இணை நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸின் கட்டுரைதான். அவர் இறந்த மறுநாளான அக்டோபர் 6-ம் தேதி 2011 அன்று அவருடைய கட்டுரை அதிகம் பார்வையாளர்களைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக வெற்றியடைந்த பின்னர் நவம்பர் 9, 2016 அன்று அவருடைய பக்கம் அதிகமான பார்வையாளர்களைப் பெற்றன.

Also Read : உலகின் விலை உயர்ந்த பொருள் என்னவென்று தெரியுமா… நாசா-வின் கணக்கு!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top