அடேய் கூகுள், நிஜமாவே இந்த ‘ஷார்ட்கட்’ இப்போதான் கொண்டுவர்றீங்களா?

நேற்று (அதாவது 26, May, 2022) ஒரு அறிவிப்பை கூகுள் வெளியிட்டது. வழக்கம்போல கூகுள் சேவைகளில் கொண்டுவரப்படும் புதிய புதிய மாற்றங்களைப் பற்றிய வழக்கமான அறிவிப்பு என்று தான் அதை எல்லாரும் பார்த்தார்கள். ஆனால், அந்த அறிக்கையை ஓப்பன் செய்தவர்களுக்கு ஓர் ஆச்சர்யம் கலந்த அதிர்ச்சி காத்திருந்தது. அது என்ன தெரியுமா?

கூகுள் குரோம் பிரவுசரை நீங்கள் பயன்படுத்தும் போது Google Drive-ல் இனிமேல் பிரபலமான Control/CMD + C, Control/CMD + V மற்றும் Control/CMD + X போன்ற ஷார்ட்கட்களை இனிமேல் பயன்படுத்தலாம்.

அந்த அதிர்ச்சி செய்தி இதுதான்.

Update Details : https://workspaceupdates.googleblog.com/2022/05/keyboard-shortcut-improvements-google-drive.html

இத்தனை நாள்களாக, Cut/Copy/Paste ஷார்ட்கட்கள் இதுவரை வேலை செய்யவில்லை என்பதையே நாம் கவணிக்காமல் இருந்திருக்கிறோம் அல்லது கவனித்தும் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் இருந்திருக்கிறோம்.

ஏறக்குறைய 50 ஆண்டுகளுக்கு முன்பு, Larry Tesler என்பவர் Xerox நிறுவனத்தில் பணிபுரிந்தபோது ஒரு விஷயத்தை உருவாக்கினார். அதுதான் Cut, Copy and Paste. அதன் பிறகு Tesler ஆப்பிள் நிறுவனத்திற்கு மாறினார். ஆப்பிளின் முதல் தலைமுறைக் கணினிகளான Lisa, Macintosh போன்ற சிஸ்டம்களில் இந்த CCP பிரபலமடைந்து பரவலாகிறது. நவீன கணினிகளில் முக்கியமாக GUI அறிமுகத்துக்குப் பிறகு தவிர்க்க முடியாத ஒரு அங்கமாக அது மாறி நிற்கிறது.

கூகுள் டிரைவ்

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு கண்டறியப்பட்டு பரவலாக அனைவராலும் பயன்படுத்தப்படும் ஒரு எளிய ஷார்ட்கட்டைத்தான் இப்போது கூகுள் ட்ரைவில் கொண்டு வந்திருப்பதாக அறிவித்திருக்கிறது கூகுள். இதுமட்டுமல்லாமல், இப்படி Ctrl/CMD+C செய்யும் போது அந்த ஃபைல் மட்டுமல்லாமல், அந்த ஃபைலின் பெயரும் இணைப்பும் சேர்ந்தே காப்பி ஆகும், அதை Google Docs அல்லது Gmail ஆகியவற்றில் ctrl/cmd + P செய்யும் போது அட்டாச் ஆகிவிடும் என்றும் தெரிவித்திருக்கிறார்கள்.

வரும் ஜூன் ஒன்றாம் தேதி முதல் இந்த வசதி அனைவருக்கும் வந்துவிடும் எனவும் அறிவித்திருக்கிறார்கள்.

Also Read : Drop Box, Cloud Storage-லாம் பழங்கால டெக்னாலஜி… புதுசு என்ன தெரியுமா..?

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டு நம்முடைய பயன்பாடுகளை மிக எளிதாக மாற்றியமைத்த இந்த ஒரு சிறிய ஷார்ட்கட்டை ஏன் இத்தனை வருடங்களாக கூகுள், அதன் டிரைவில் கொண்டு வராமல் இருந்தது என்பது புரியாத புதிர்தான்?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top