Drue Kataoka

கிளப் ஹவுஸ் ஐகானில் இடம்பெற்றிருக்கும் ஜப்பான் பெண் – யார் இவர்?

கிளப் ஹவுஸ் இப்போது பலருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால், லட்சக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் கிளப் ஹவுஸ் செயலியின் ஐகானில் இருக்கும் நபர் யார் என தெரியுமா? விஷூவல் ஆர்டிஸ்ட், டெக்னாலஜிஸ்ட் மற்றும் சோஷியல் ஆக்டிவிஸ் என பல முகங்களைக் கொண்ட ட்ரூ கடோகோதான் (Drue Kataoka) அது. அடுத்த சில வாரங்களுக்கு ட்ரூவின் புகைப்படம்தான் கிளப் ஹவுஸின் ஐகானாக இருக்கும். எட்டாவது நபராக ஐகானில் இருக்க தேர்ந்தெடுக்கப்பட்ட ட்ரூ பற்றிய தகவல்களைதான் இந்தக் கட்டுரையில் நாம தெரிஞ்சுக்கப் போறோம்.

ஜப்பானில் உள்ள டோக்கியோவில் பிறந்த ட்ரூ தனது கலைப் பயிற்சியை ஜப்பானிலேயே தொடங்கினார். பின்னர், ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். தற்போது சிலிக்கான் வேலியில் வசித்து வருகிறார். ஜப்பானியர்கள் பாரம்பரிய ஓவிய முறையான இங்க் பெயிண்டிங் உள்ளிட்ட பல ஓவிய முறைகளில் ஓவியங்களை வரைந்து வருகிறார். 2008-ம் ஆண்டு சர்வதேச விண்வெளி நிலையத்தில் புவி ஈர்ப்பு விசை இல்லாத இடத்தில் கண்காட்சியை நடத்தி பலரது கவனத்தையும் பெற்றார். 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் கண்காட்சியை நடத்தியுள்ளார். உலக பொருளாதார மன்றத்தின் இளம் மற்றும் கலாசார தலைவராகவும் உள்ளார். ஸ்விட்சர்லாந்தில் உள்ள டாவோஸில் நடைபெற்ற WEF வருடாந்திர கூட்டத்தில் மூன்று முறையும் டாலியன், யாங்கோன், உலான்பாதர் மற்றும் ஜெனீவா ஆகிய பகுதியில் நடந்த கூட்டங்களிலும் அவர் பேசியுள்ளார். 

Drue Kataoka
Drue Kataoka

உலக கலை மன்றத்துக்கான சின்னத்தை உருவாக்கியுள்ள இவர், கிளப் ஜவுஸ் ஐகானில் இடம்பெற்றுள்ள ஆசிய வம்சாவளியைச் சேர்ந்த முதல் பெண் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். இதனை பலரும் சமூக ஆர்வலர்கள் மற்றும் கலைஞர்களுக்கான அங்கீகாரமாக கருதுகின்றனர். அமெரிக்காவில் ஆசிய – அமெரிக்க மக்களுக்கு எதிராக வெறுப்பு தொடர்பான குற்றங்கள் அதிகரித்து வரும் சூழலில் ட்ரூவின் புகைப்படம் கிளப் ஹவுஸில் இடம்பெற்றுள்ளது முக்கியமானதாகக் கருதப்படுகிறது. கிளப் ஹவுஸில் சுமார் 7 லட்சம் பின்தொடர்பவர்களைக் கொண்ட ட்ரூ இனரீதியிலான ஒடுக்கு முறைகள், பாலினம் தொடர்பான வேறுபாடுகள் மற்றும் அடையாளம் தொடர்பான நடவடிக்கைகளுக்கு எதிரான உரையாடல்களை ஊக்குவித்து வருகிறார்.#StopAsianHate என்ற தலைப்பில் கிளப் ஹவுஸில்ட்ரூவால் தொடங்கப்பட்ட பிரசாரத்தின் வழியாக ஆசிய அமெரிக்க கூட்டமைப்பிற்கு சுமார் 90,000 டாலர்கள் பணத்தை திரட்டியுள்ளனர். ஒரு மணி நேரத்தில் சுமார் 10,000 டாலர்களை அவர் திரட்டியதும் பலரது கவனத்தைப் பெற்றது.

Drue Kataoka
Drue Kataoka

கொரோனா தொடர்பான ஊரடங்கு பல துறைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த பாதிப்பிலும் ட்ரூ வாய்ப்பு ஒன்று இருப்பதை குறிப்பிடுகிறார். இதுதொடர்பாக ட்ரூ பேசும்போது, “கலைக்கூடங்கள், கலை நிறுவனங்கள் மற்றும் கலைஞர்கள் தொழில்ந்ய்ட்பம் தொடர்பான விஷயங்களில் தங்களை அடாப்ட் செய்வதில் மெதுவாக உள்ளனர். அதுமட்டுமல்லாமல் பாலியல் மற்றும் இனவெறி தொடர்பான பிரச்னைகளை மிகவும் சாதாரணமாக பார்வையிடுகின்றனர். 2020-ம் ஆண்டில் கலைஞர்களில் பலர் தொழில்நுட்பங்களை கையில் எடுக்க தூண்டப்பட்டனர். அவர்கள் வசதியாக இதனை உணராதபோதிலும் தொழில்நுட்பங்களில் ஈடுபடவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. முடிவுகள் இப்போதும் கலவையாகவே உள்ளன. ஆனால், இது மிகவும் மாறுபட்ட மற்றும் சாத்தியமான சுற்றுசூழல் அமைப்பை ஏற்படுத்தக்கூடும். கடந்த வருடங்களை ஒப்பிடும்போது மிகவும் அதிக வேகத்தில் இவை வளர்ந்து வருகின்றன” என்று தெரிவித்துள்ளார். மேலும், கலை மற்றும் தொழில்நுட்பம் இரண்டையும் இணைப்பதில் அதிக ஆர்வத்தைக் காட்டி வருகிறார். அதாவது, “Art is technology and technology is art” என்பதை கடந்த பல தசாப்தங்களாக மந்திரமாக வைத்து இருப்பதாகவும் குறிப்பிடுகிறார்.

Also Read : புது ரகமா இருக்கே… Club House -னா என்னாப்பா?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top