ஒரு பொண்ணு என்ன ஹேண்ட்பேக் யூஸ் பண்றாங்கன்றதை வச்சே அந்த பொண்ணோட கேரக்டரை சொல்ல முடியும்.. அப்படினு நாங்க சொல்லலை. கலகத் தலைவன் படத்துல உதயநிதி சொல்றாரு. ‘How to tell a women by her Handbag’ அப்படினு ஒரு புக்கைதான் இதுக்கு ரெஃபரன்ஸா சொல்வாரு. இது ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜர்னலிஸ்ட் Kathryn Eisman எழுதுன புத்தகம். இந்த புத்தகத்துல அப்படி என்னதான் சொல்லிருக்காங்கனு வாங்கி படிக்கலாம்னு பார்த்தா 840 ரூவாயாம். தேவையில்லீங்க நாங்க கூகுள்லயே பார்த்துக்குறோம்னு தேடிப்பார்த்ததுல சில விஷயங்கள் சொல்லிருக்காங்க. என்ன மாதிரி ஹேண்ட்பேக் யூஸ் பண்றவங்க என்ன மாதிரி இருப்பாங்கன்ற சைக்காலஜி + அனலாஜிதான் இந்த வீடியோ. எத்தனை ஃபெமினிஸ்ட்ஸ் சண்டைக்கு வரப்போறாங்கனு தெரியலை.. அதுக்கு என்ன சார் பண்றது நம்ம கடமையை நாம செஞ்சுதான ஆகணும்.

- Tote Bag – ஷோல்டர்ல மாட்டிக்குற மாதிரியான பேக், கைக்குள்ள அடக்கி வச்சிருந்தா அந்த பெண்கள் ரொம்ப பிராக்டிகலான ஆட்கள். மேக்கப் ப்ரொடக்ட்ஸ், டைரி, குடை, பெப்பர் ஸ்ப்ரே ஒரு சூப்பர் மார்க்கெட்டே எடுத்துட்டு போவாங்க. ரொம்ப கவனமா இருப்பாங்க. சுத்தி என்ன நடக்குதுங்குறதை கவனிச்சுட்டே இருப்பாங்க. ரொம்ப Organized ஆட்கள். இவங்களுக்குனு எப்பவும் சில ஒபீனியன் இருக்கும். புது ஆட்களோட பழகுறது இவங்களுக்குக் கொஞ்சம் சிரமம்தான். எந்நேரமும் எல்லாரையும் ஒரு சந்தேகத்தோடயே பார்த்துட்டு இருக்குறது சில நேரங்கள்ல பிரச்னையாவும் போயிடும்.
- சச்சின் விஜய் மாதிரி க்ராஸா பேக் மாட்டி சுத்துற பெண்கள் ரொம்ப பிசியானவங்களா இருப்பாங்க. கைகளை மேக்சிமம் ஃப்ரீயா வச்சிக்க விரும்புறவங்க. தெரிஞ்ச ஆட்களோட சகஜமாவும் தெரியாத ஆட்கள்ட்ட பாதுகாப்பாவும் இருக்க ட்ரை பண்ணுவாங்க. மொபைல், ஐடி கார்டு இப்படி ரொம்ப கம்மியான பொருட்கள் மட்டும் இருந்தா போதும். ஃபன்னான இருக்கவும் ஸ்டைலா இருக்கவும் விரும்புவாங்க.
- இங்கிலாந்து ராணி மாதிரி முழங்கைல ஹேண்ட்பேக் தூக்கிட்டு போற பெண்கள் மத்தவங்களை ரொம்ப இம்ப்ரஸ் பண்ணனும் ட்ரை பண்ணுவாங்க. அவங்களை பத்தி எல்லாரும் பேசணும்னு விரும்புவாங்க. ஹேண்ட்பேக் ஒரு ஸ்டேட்டஸ் சிம்பல்னு நினைக்குறவங்க. இவங்களை மாதிரியே இருக்குற பெண்கள்கிட்ட டக்குனு ஒட்டிக்குவாங்க.
- ஒரு சைடு மட்டும் ஸ்விங் பேக் போட்டிருக்குற பெண்கள் ரொம்பவே Spontaneous. பிராண்டு பத்தி கவலைப்படாதவங்க குவாலிட்டிதான் முக்கியம். ரொம்ப ஃப்ரெண்ட்லி, ரொம்ப கிரியேட்டிவ். எந்த ப்ளானும் இல்லாம நடக்குற விஷயங்களையே ப்ளானா மாத்திக்குற Go with a Flow கேட்டகிரி.
- பேக்லாம் வேணாம்னு கைல குட்டியா வாலட் தூக்கிட்டு சுத்துற பெண்கள் ரொம்பவே பாசிட்டிவானவங்க. என்ன பெருசா நடந்துறப்போகுது பாத்துக்கலாம்னு நினைக்குறவங்க. எல்லாரோடவும் ஈசியா பழகுனாலும் மோட்டிவேசன் கொடுக்கிற மாதிரியான ஆட்கள்கூட மட்டும்தான் ஜெல் ஆவாங்க.
- குட்டியா கியூட்டா பூப்போட்ட பேக் யூஸ் பண்ற பெண்கள் ஹாசினி டைப். அதாவது ஈ, எறும்புக்குக் கூட துரோகம் நினைக்காதவங்க. அழகழகா டிரெஸ் போடுறது, கலர் கலரா நெய்ல்பாலிஸ் போடுறதுனு எந்நேரமும் பெண்ணாக உணரும் பொம்மீஸ் நைட்டீஸ் வகையறா.
Also Read – 4000 பாட்டு பாடியிருக்கிற திப்புவை unsung singer -னு சொல்லலாமா..!?
அவ்ளோதான் பாஸ் கூகுள்ல போட்டிருக்கு. அப்பறம் ஒரு முக்கியமான விஷயம். இதெல்லாம் சும்மா தெரிஞ்சு வச்சிக்குற Good for Nothing தகவல் மட்டும்தான். எப்படி ஒருத்தர் கருப்பு சட்டை போட்டிருக்குறதை வச்சு மட்டும் அவர் பெரியாரிஸ்டா, ஐயப்பனிஸ்டானு சொல்லமுடியாதோ அந்த மாதிரி வெறும் ஹேண்ட்பேக்கை மட்டும் வச்சி எந்த பெண்ணையும் ஜட்ஜ் பண்ணிடமுடியாது. ஒருவேளை இதெல்லாம் நெசம்னு நம்பி எங்கிட்டாச்சும் போய் அடிவாங்குனீங்கன்னா அந்த எக்ஸ்பீரியன்ஸை ஒரு வீடியோவா எடுத்து தமிழ்நாடு நவ்க்கு அனுப்புங்க. ஜாலியா இருக்கும்.
0 Comments