ட்விட்டர், ஃபேஸ்புக்ல எப்படி எல்லாரும் அக்கவுண்ட் வச்சிருக்காங்களோ அதே மாதிரி `யூ டியூப்லயும் ஒரு அக்கவுண்ட தொடங்கி விடுவோம்’னு ஆளுக்கொரு யூ டியூப் சேனல் வச்சிருக்காங்க. குறிப்பா லாக்டௌனுக்கு அப்புறமா யூ டியூப் சேனல் வச்சிருக்குறவங்களோட எண்ணிக்கை ரொம்ப அதிகமா இருக்குனே சொல்லலாம். அவ்வளவு யூ டியூப் சேனல் வந்துருக்கு. ஆனால், அதுக்கு முன்னாடில இருந்தே யூ டியூப் பிரபலமாகி இந்திய அளவுல டாப் 10-ல இருக்குற சோலோ யூ டியூப் கிரியேட்டர் பத்தி தான் இப்போ தெரிஞ்சுக்க போறோம்.
Also Read : சிரிக்கலாம் வாங்க… வைரலாகும் லாக்டௌன் மீம் கலெக்ஷன்!
Reference :Top 10 Most Popular YouTubers in India (2021)
-
1 Carry Minati
இந்தியாவில் `CarryMinati’ என்ற யூ டியூப் சேனல் சுமார் 29.9 மில்லியன் சப்ஸ்கிரைபர்களைப் பெற்றுள்ளது. இந்த சேனலின் சொந்தக்காரரான அஜெய் நாகர் `YALGAAR' என்ற பாடலின் மூலம் மிகவும் பிரபலமடைந்தார். இந்த பாடல் மட்டும் சுமார் 229 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்றுள்ளது. யூ டியூப் vs டிக்டாக் சர்ச்சைகள் எழுந்த சமயத்தில் இவர் வெளியிட்ட வீடியோ பரவலாகக் கவனம் பெற்றது.
-
2 Ashish chanchlani vines
இந்தியாவின் ஃபன்னியஸ்ட் யூ டியூபர்களின் ஆஷிஷ் சஞ்ச்லானியும் ஒருவர். இவருக்கு சுமார் 24.6 மில்லியன் சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர். பலவித கெட்டப்கள் போட்டு டிரெண்டிங்க்கு ஏற்ற கன்டென்டுகளுடன் களமிறங்கும் ஆஷிஷின் வீடியோக்கள் யூடியூப்கள் மட்டுமல்லாது ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்றவற்றிலும் டிரெண்டிங்தான்.
-
3 Amit Bhadana
`மக்களை சிரிக்க வைக்க முயற்சி செய்கிறேன்’ என்ற டேக் லைனோடு இருக்கும் அமித்தின் யூடியூப் சேனலுக்கு சுமார் 23 மில்லியன் சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர். தினசரி வாழ்க்கையுடன் தொடர்புடைய கன்டென்டுகளை நகைச்சுவையுடன் உருவாக்குவதில் அமித் வேற லெவல். பேருந்தில் தினசரி பயணிக்கும் மக்களின் பிரச்னையப் பற்றி அவர் வெளியிட்டிருக்கும் வீடியோ நார்த்தில் செம வைரல். பெற்றோர்களுக்குத் தெரியாமல் இந்த சேனலை அவர் உருவாக்கி நடத்தி வந்துள்ளார். சேனலானது புகழ் அடைந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகே அவர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார். தாதா சாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த யூடியூபர் விருதையும் இவர் பெற்றுள்ளார்.
-
4 Bhuvan Bam
`BB Ki Vines' என்ற சேனலை நடத்தி வரும் புவன் மக்களிடம் மிகவும் பிரபலமடைந்த முதல் இந்திய யூ டியூபர் மற்றும் சிங்கர் ஆவார். முதன் முதலில் 10 மில்லியன் சப்ஸ்கிரைபர்களைப் பெற்றவரும் இவர்தான். `World Economic Forum’-ன் வருடாந்திர கூட்டத்தில் கலந்து கொள்ள அழைக்கப்பட்ட முதல் யூடியூபரும் இவர்தான். கொரோனா லாக்டௌனால் பாதிப்படைந்த ஏழை தொழிலாளர்கள் பற்றிய அவரது வீடியோ பிரபலமானது. தற்போது சுமார் 20.4 மில்லியன் சப்ஸ்கிரைபர்களுடன் சக்சஸ்ஃபுல்லாக பயணிக்கிறார். `Titu Talks' என்ற பெயரில் ஜானி சின்ஸ், ஷாரூக் கான் மற்றும் கரண் ஜோகர் போன்ற பல பிரபலங்களை நேர்காணல் செய்த வீடியோக்களும் டிரெண்டிங். `Most Popular YouTube Channel', `Global Entertainer of the Year' போன்ற விருதுகளையும் பெற்றுள்ளார்.
-
5 Technical Guruji
யூடியூப்பில் ஸ்மார்போன்கள் மற்றும் கேட்ஜெட்டுகளை ரிவியூ செய்யும் குறிப்பிடத்தக்க நபர்களில் கவுரவ் சவுத்ரியும் ஒருவர். ஃபோர்ப்ஸ் வெளியிட்ட முப்பது வயதுக்குட்பட்ட பிரபலங்களின் பட்டியலில் இவர் இடம் பிடித்துள்ளார். ``டெக்னாலஜி பற்றிய விஷயங்களை எளிமையாக மக்களுக்கு எடுத்துச் செல்வதே என்னுடைய நோக்கம்” என்று இந்த சேனலை நடத்தி வருகிறார். தினமும் இரண்டு வீடியோக்களை பதிவிடும் குருஜி இதுவரை 21.2 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்றுள்ளார். `Gaurav Chaudhary’ என்ற மற்றொரு சேனலையும் இவர் நடத்தி வருகிறார். இதில் டிராவல், லைஃப் டாக்ஸ் போன்ற இன்ட்ரஸ்டிங்கான வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.
-
6 Round 2 Hell
ஜெயின், நஸீம் மற்றும் வாசிம் ஆகிய மூன்று நண்பர்களும் இணைந்து நடத்தும் யூடியூப் சேனல்தான் இது. டாப்பிக்கல் டிரெண்டிங் வீடியோக்களை நகைச்சுவையுடன் பதிவிடுவதுதான் இவர்கள் சிறப்பே. இதுவரை சுமார் 20.4 மில்லியன் மக்கள் இந்த சேனலை சப்ஸ்கிரைப் செய்துள்ளனர். இந்த சேனலின் மூலம் தாங்கள் ஈட்டிய முதல் வருவாயை ஏழைகளுக்கு உதவி செய்வதற்காக நன்கொடையாக வழங்கினர். ஆரம்பத்தில் யாரும் அவர்களை அதிகளவில் ஆதரிக்கவில்லை என்றாலும் நண்பர்கள் உற்சாகப்படுத்தியதால் தொடர்ந்து வீடியோக்களைப் பதிவிடத் தொடங்கினர். யூ டியூப் vs டிக்டாக் என்ற வீடியோவை இவர்களும் பதிவிட்டனர். இந்த வீடியோவை பதிவேற்றிய 10 நிமிடங்களில் 1 லட்சம் லைக்குகளைப் பெற்றன. டிரெண்டிங் நம்பர் 1-க்கு வந்தது. ஆனால், பல சர்ச்சைகளையும் உருவாக்கியது.
-
7 Sandeep Maheshwari
சிறந்த மோட்டிவேஷனல் ஸ்பீக்கராகவும் ஆந்த்ரபிரினராகவும் இருந்து வரும் சந்தீப் 2000-வது ஆண்டில் ஃப்ரீலான்ஸ் புகைப்படக் கலைஞராக தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கினார். வாழ்க்கையில் பன்வேறு ஏற்றத் தாழ்வுகளை சந்தித்த அவர் பின்னாளில் சிறந்த மோட்டிவேஷன் ஸ்பீக்கராக உருவாகினார். இதுவரை சுமார் 19.9 மில்லியன் சப்ஸ்கிரைபர்களைப் பெற்றுள்ளார். புகைப்படக் கலைஞராக இருந்தபோது லிம்கா சாதனைகளைப் படைத்த இவர் பல்வேறு விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளார். தனது வெற்றிக்கான மந்திரத்தை இளைஞர்களுடன் பகிர்ந்துகொள்ள முடிவு செய்து இந்த சேனலைத் தொடங்கியுள்ளார். நாடு முழுவதும் அடிக்கடி பல்வேறு கருத்தரங்குகளை நடத்துகிறார். அதில் ஆயிரக்கணக்கான மக்களும் கலந்துகொள்கின்றனர்.
-
8 Dr Vivek Bindra
பிசினஸ் மற்றும் ஆந்த்ரபிரனர்ஷிப்பில் உங்களுக்கு ஆர்வம் இருந்தால் நிச்சயம் டாக்டர். விவேக் பிந்த்ராவின் சேனல் உங்களுக்கு உதவியாக இருக்கும். இதுவரை சுமார் 16.3 பில்லியன் சப்ஸ்கிரைபர்களைப் பெற்றுள்ள அவர் சப்ஸ்கிரைபர்களுக்காக பல course-களையும் வழங்குகிறார். அவருடைய சிறந்த பணிக்காக `திங்க் டேங்க் ஆஃப் கார்ப்பரேட் ஆசியா’-வின் சிறந்த பயிற்சியாளர் விருதைப் பெற்றுள்ளார்.
-
9 Emiway Bantai
எமினெம் மற்றும் லில் வெய்ன் ஆகியோரின் பெயர்களை இணைத்து எமிவே என்ற பெயருடன் ஆரம்பிக்கப்பட்ட சேனல்தான் `Emiway Bantai.’ இதுவரை 15.3 மில்லியன் சப்ஸ்கிரைபர்களைப் பெற்றுள்ளது, இந்த சேனல். சிறந்த ராப் பாடல்களைப் பாடும் எமிவேயின் பல பாடல்கள் 100 மில்லியன்கள் பார்வையாளர்களைக் கடந்துள்ளது. `America’s Got Talent’ என்ற நிகழ்ச்சியைப் போன்று இந்தியாவில் நடத்தப்பட்ட `India’s Got Talent’ என்ற நிகழ்ச்சியின் கலந்துகொண்ட எமிவே நிராகப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
10 Nisha Madhulika
இந்தியாவில் சமையல் மற்றும் உணவுப் பிரியர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட ஒரு சேனல், `NishaMadhulika.' உணவு ரெசிப்பிக்களை வலைதளங்கள் பலவற்றிலும் எழுதி வருவதோடு உணவகங்களின் ஆலோசகராகவும் இருந்து வருகிறார். 2016-ல் லோக் சபா டிவி இவருடன் இணைந்து நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது. மக்கள் மத்தியில் இந்த நிகழ்ச்சி பெரும் வரவேற்பைப் பெற்றது. காஃபி டேபிள் புக்கில் இவர் இடம்பிடித்துள்ளார். 2011-ல் சேனலைத் தொடங்கியதில் இருந்து 1,000-க்கும் மேற்பட்ட வீடியோக்களை பதிவிட்டுள்ளார். சுமார் 11.4 மில்லியன் சப்ஸ்கிரைபர்களையும் பெற்றுள்ளார்.
0 Comments