சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இதுவரை விளையாடிய நான்கு போட்டிகளுமே சென்னையில் நடந்தன. இந்த நான்கு போட்டிகளிலுமே எஸ்.ஆர்.ஹெச் வீரர்களைத் தாண்டி கவனம் ஈர்த்தவர் காவ்யா மாறன். பஞ்சாப் கிங்ஸை வென்ற பிறகு `அப்பாடா’ என காவ்யா கொடுத்த ஸ்மைல் எக்ஸ்பிரஷன் ட்விட்டர், இன்ஸ்டா மட்டுமல்லாது சோசியல் மீடியா தளங்களில் வெறித்தன வைரல்.
-
1 Kavya Maran
சன் குழும கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறன். கடந்த 2008ம் ஆண்டு ஐபிஎல் அணியான சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை சன் குழுமம் வாங்கியது. அதன்பிறகு, எஸ்.ஆர்.ஹெச் விளையாடும் போட்டிகளில் ஆஜராகிவிடும் காவ்யா மாறன் லைம் லைட்டுக்கு வந்தார். சென்னையில் நடந்த ஐபிஎல் ஏலத்திலும் இவர் கலந்துகொண்டார். அப்போதே இவரது எக்ஸ்பிரஷன்கள், ரியாக்ஷன்களுக்கு லைக்ஸ் குவிந்தன. ‘யார் இந்த காவ்யா மாறன்?’ என கூகுளை தீண்டத் தொடங்கினார்கள் நெட்டிசன்ஸ்.
1992-ம் ஆண்டு பிறந்த காவ்யாவுக்கு இப்போது 29 வயது. எம்.பி.ஏ. படித்திருக்கும் இவருக்கு ஏவியேஷன் மற்றும் ஊடகத் துறையில் ஆர்வம் அதிகம். சன் மியூசிக் சேனல், சன் குழும எஃப்.எம் சேனல்களின் நிர்வாகக் குழுவில் முக்கியப் பொறுப்பில் இருக்கும் காவ்யா, சன்ரைசர்ஸ் விளையாடும் போட்டிகளில் தவறாமல் ஆஜராகி விடுவார். சன்ரைசர்ஸ் அணியின் நிர்வாகக் குழுவிலும் இவருக்கு முக்கியப் பொறுப்பு அளிக்கப்பட்டிருக்கிறது.
காவ்யாவின் தாய் காவேரி மாறன் சன் குழுமத்தின் நிர்வாக இயக்குநர்களில் ஒருவர். இந்திய அளவில் அதிக ஊதியம் பெறும் பெண் தொழிலதிபர்களுள் ஒருவர். -
2 சோசியல் மீடியா
சோசியல் மீடியாக்களில் இருந்து ஒதுங்கியே இருக்கும் காவ்யா மாறனுக்கு, ட்விட்டரிலோ, இன்ஸ்டாகிராம் அல்லது ஃபேஸ்புக்கிலோ அதிகாரபூர்வ கணக்கு இல்லை. ஆனால், அவர் பெயரில் நிறைய ஃபேக் ஐ.டிக்கள் இருக்கின்றன.
-
3 வைரல்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் விளையாடிய மூன்று போட்டிகளிலுமே தோல்வியைத் தழுவியது. இதனால், கேலரியில் இருந்த காவ்யா மாறன் ரொம்பவே அப்செட் ஆனார். அவர் கண்ணீரைத் துடைப்பது, சோகமாக அமர்ந்திருப்பது என சோக ரியாக்ஷன் போட்டோக்கள் வைரலாகின. `இவரை சிரிக்க வைக்கவாவது எஸ்.ஆர்.ஹெச் அணி வெற்றி பெற வேண்டும்’ என மீம் வேண்டுதல்கள் குவிந்தன.
இந்த சூழலில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கெதிரான தனது நான்காவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் அணி முதல் வெற்றியைப் பதிவு செய்தது. அப்போது, `ஒரு வழியாக சிரிப்பைப் பார்த்து விட்டோம்’ என சந்தோஷ எமோஜிக்களை சோசியல் மீடியாவில் பரவவிட்டு வருகிறார்கள் ரசிகர்கள். -
4 பிடித்த பொழுதுபோக்குகள்
குடும்பத்தினருடன் ஐபிஎல் போட்டிகள் பார்ப்பது காவ்யாவின் இப்போதைய டாப் பொழுதுபோக்கு. தொலைதூரப் பயணங்களுக்கு எப்போதுமே இவரது பேவரிட் லிஸ்டில் இடம் உண்டாம். ஓய்வு நேரங்களில் இசை கேட்பது பிடித்தமான பொழுதுபோக்கு.
0 Comments