• `கராத்தே பிளாக் பெல்ட்; 2014 தேர்தல்’ – `பவர் ஸ்டார்’ பவன் கல்யாண் பற்றிய 9 சுவாரஸ்யங்கள்!

    நடிகர், இயக்குநர், ஸ்டண்ட் கொரியோகிராஃபர், திரைக்கதையாசிரியர் என பன்முகம் கொண்டவர். 2003-ல் ஸ்போர்ட்ஸ் டிராமாவான Johnny படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். ஆந்திராவில் முதல்முறையாக 250 தியேட்டர்களில் வெளியான அந்தப் படம், எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. 1 min


    பவன் கல்யாண்
    பவன் கல்யாண்

    தெலுங்கு சினிமாவின் முன்னணி ஹீரோவான `பவர் ஸ்டார்’ பவன் கல்யாண் பற்றிய 9 சுவாரஸ்யத் தகவல்கள்..!

    • பவன் கல்யாணின் உண்மையான பெயர் `கொனிடேலா கல்யாண் பாபு’. தான் கற்றுத்தேர்ந்த கராத்தே கலையைப் பற்றி அவர் நடத்திய நிகழ்ச்சி ஒன்றுக்குப் பின்னர் பவன் என்ற பெயரைப் பயன்படுத்தத் தொடங்கினார்.
    • டோலிவுட்டின் முன்னணி நடிகர் சிரஞ்சீவியின் இளைய சகோதரரான பவனுக்கு சினிமா இயக்குவதில்தான் தீவிர ஆர்வம் இருந்திருக்கிறது. ஆனால், ஹீரோவாக நடியுங்கள் என சிரஞ்சீவியின் மனைவி சுரேகா ஆலோசனை சொன்னதை அடுத்து நடிக்க வந்திருக்கிறார்.
    பவன் கல்யாண் - சிரஞ்சீவி
    பவன் கல்யாண் – சிரஞ்சீவி
    • 1996-ல் வெளியான `Akkada Ammayi Ikkada Abbayi’ படம் மூலம் நடிகராக அறிமுகமானர். இவரது நான்காவது படமானTholi Prema’ சிறந்த தெலுங்குப் படத்துக்கான தேசிய விருதோடு, ஆந்திர அரசின் 6 நந்தி விருதுகளையும் வென்றது.
    • கராத்தேவில் பிளாக் பெல்ட் பெற்றிருப்பவர். மார்ஷியல் ஆட்ர்ஸில் நிபுணத்துவம் பெற்றிருக்கும் பவன் கல்யாண், தனது படங்களான Khushi’,Teen Maar’ மற்றும் `Badri’ ஆகிய படங்களுக்கு ஸ்டண்ட் கொரியோகிராஃபராகவும் பணியாற்றியிருக்கிறார்.
    • சேகுவராவின் தீவிர ரசிகரான பவன், ஹைதராபாத் புறநகர்ப் பகுதியில் இருக்கும் தோட்டத்தில் பழங்கள், காய்கறிகளை வளர்த்து வருகிறார்.
    • மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கு அவர், 2014-ல் `ஜனசேனா’ என்ற பெயரில் தனிக் கட்சி தொடங்கி, தெலுங்குதேசம், பா.ஜ.க ஆகிய கட்சிகளுக்கு ஆதரவாகப் பிரசாரம் மேற்கொண்டார்.
    • 2014 மக்களவைத் தேர்தலின்போது கூகுளில் அதிகம் தேடப்பட்ட அரசியல் பிரபலம்.
    • 2013-ல் ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்ட `Top 100 Celebrities’ பட்டியலில் பவனுக்கு 30-வது இடம் அளிக்கப்பட்டிருந்தது.
    • நடிகர், இயக்குநர், ஸ்டண்ட் கொரியோகிராஃபர், திரைக்கதையாசிரியர் என பன்முகம் கொண்டவர். 2003-ல் ஸ்போர்ட்ஸ் டிராமாவான Johnny படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். ஆந்திராவில் முதல்முறையாக 250 தியேட்டர்களில் வெளியான அந்தப் படம், எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

    Also Read – `தேனிசைத் தென்றல்’ தேவா ரசிகர்களே… அவரைப் பற்றி உங்களுக்கு எந்தளவுக்குத் தெரியும்? #Quiz


    Like it? Share with your friends!

    547

    What's Your Reaction?

    lol lol
    12
    lol
    love love
    8
    love
    omg omg
    40
    omg
    hate hate
    8
    hate

    0 Comments

    Leave a Reply

  • Choose A Format
    Personality quiz
    Series of questions that intends to reveal something about the personality
    Trivia quiz
    Series of questions with right and wrong answers that intends to check knowledge
    Poll
    Voting to make decisions or determine opinions
    Story
    Formatted Text with Embeds and Visuals
    List
    The Classic Internet Listicles
    Countdown
    The Classic Internet Countdowns
    Open List
    Submit your own item and vote up for the best submission
    Ranked List
    Upvote or downvote to decide the best list item
    Meme
    Upload your own images to make custom memes
    Video
    Youtube and Vimeo Embeds
    Audio
    Soundcloud or Mixcloud Embeds
    Image
    Photo or GIF
    Gif
    GIF format
    `இதை டேஸ்ட் பண்ணிருக்கீங்களா?!’ – இந்தியாவின் தித்திப்பான 10 இனிப்புகள்! தமிழ் சினிமாவின் ‘Anthology’ திரைப்படங்கள்! `சில்லென்ற பனியே…’ டிசம்பரில் பனிப்பொழிவு பெறும் இந்தியாவின் 10 இடங்கள்! இந்தியாவின் மிக அழகான 10 விளையாட்டு மைதானங்கள்! ட்விட்டரில் அதிக ‘Followers’ கொண்ட டாப் 10 இந்தியர்கள்!