நித்யஶ்ரீ | நம்ப சின்னதா ஸ்டார்ட் பண்ற ஒரு விஷயம் தான் அடுத்து அடுத்து பெரிய ஆச்சரியங்களை கொடுக்கும். நினைச்சு பார்க்காத இடத்துக்கு அது நம்மள கூட்டிட்டு போகும். இங்க அப்படி விளையாட்டா எந்த எதிர்பார்பும் இல்லாம ஒரு மியூசிக் மேஷ் அப் போட்ட ஒருத்தவங்களோட வீடியோ 108 மில்லியன் வியூஸ் ஓட இன்னைக்கும் நின்னு பேசுது. ஒரு மியூசிக் ஷோவுக்காக 150 பாட்டு மனப்பாடம் பண்ணி இருக்காங்க.
4 வயசுல மியூசிக்-ல இருக்க பிழையைக் கண்டுபிடிச்சு சொல்லி இருக்காங்க. அவங்க வேற யாரும் இல்லை, தமிழகத்தின் செல்லக் குரலுக்கான தேடலில் சூப்பர் சிங்கர் தேடி எடுத்த நிக்காத நித்யஸ்ரீ தான். இவங்க மனப்பாடம் பண்ணி எத்தனை பாட்டு ஸ்டேஜ்ல பாடுனாங்க தெரியுமா? நித்ய ஸ்ரீ-யோட மியூசிக் சீக்ரெட் பத்தி
வீடியோலப் பார்க்கலாம்.

நித்யஸ்ரீ-க்கு 4 வயசு இருக்கும் போது அவங்க அம்மா பாடுனதை கேட்டுட்டு இந்த இடத்துல தப்பா பாடுறீங்கன்னு சொல்லி இருக்காங்க. நித்யஸ்ரீயோட அம்மாவும் ஒரு சிங்கர் அப்படிங்குறதால பொண்ணுக்கு இசை ஆர்வம் இருக்குன்னு கொண்டு போய் பாட்டு கத்துக்க விட்டு இருக்காங்க. 4 வயசுல எப்படி பாட்டு பாடுவாங்க கூட்டிட்டு போங்கன்னு சொல்லிட்டாங்கலாம். சரி-ன்னு அவங்க அம்மாவே 2 வருஷம் பாட்டு சொல்லி கொடுத்து இருக்காங்க. பிறகு 6 வயசுல முறையா இசையை கத்துக்க ஸ்டார்ட் பண்ணி இருக்காங்க.
இவங்களோட 9 வயசுல தான் சூப்பர் சிங்கர் ஜூனியர் 2 சீசன்ல பாடி, சூப்பர் சிங்கர்-க்கு அறிமுகம் ஆகுறாங்க. சின்ன வயசுல இருந்தே நித்யஸ்ரீ நல்லா
துறு துறு ன்னு இருக்க பொண்ணு. அதுனால நித்ய ஸ்ரீ-க்கு நிக்காத நித்ய ஸ்ரீ அப்படின்னு பேர் வெச்சு இருக்காங்க. சூப்பர் சிங்கர்ல கலந்துகிட்டு அந்த போட்டியில் இரண்டாவது இடம் பிடிச்சாங்க.
அப்படியே தொடர்ந்த இசைப் பயணம் நித்யா,வை மும்பை வரை கூட்டிட்டு போய் இருக்கு. சோனி டிவி-யில் ஒளிபரப்பான Indian Idol Junior-ல பாட ஸ்டார்ட் பண்ணி இருக்காங்க. தமிழ் பாடல்கள் பாடிட்டு இருந்த நித்ய ஸ்ரீ-க்கு ஒரு பெரிய சவாலாக அந்த ஷோ இருந்துச்சு. நார்த் சைடு நடக்கும் ஒரு மியூசிக் ஷோ அப்படிங்குறதால ஹிந்தி மற்றும் வேறு சில மொழிகளில் பாடா வேண்டிய அவசியம் இருந்தது. ஸ்கூலுக்கு மொத்தமா லீவு போட்டுட்டு 150 ஹிந்தி பாடல்களை மனப்பாடம் பண்ணி இருக்காங்க. ஆனா இவங்க மனப்பாடம் பண்ண ஒரு பாட்டு கூட ஸ்டேஜ்ல நித்யா பெர்ஃபார்ம் பண்ணலையாம். நித்யா-க்கு வேற வேற பாடல்களை பாட கொடுத்து இருக்காங்க. இவங்க ஆல்ரெடி நல்ல பயிற்சி பண்ணியிருந்ததால, ஈஸியா பாடிட்டு இருக்காங்க.
அந்த நிகழ்ச்சியோட ஒரு சுற்றுல மறைந்த பாடகர் கே.கே கூடவும் சேர்ந்து நித்யா ஸ்டேஜ்ல பாடி இருக்காங்க. அந்த வீடியோ யூடியூப்-லயும் 3 மில்லியன் வியூஸ் அடிச்சு ஹிட் ஆச்சு. ஹிந்தி மட்டும் இல்லாம பிற மொழிகளிலும் பாடி Indian Idol ஷோவுல இரண்டாவது பரிசு வாங்கி வின் பண்ணி இருக்காங்க. இப்படியே 8 மாசம் மும்பைல தான் அவங்களோட வாழ்க்கை இருந்து இருக்கு. இவங்க மியூசிக்ல கவனம் செலுத்த, அவங்களோட ஸ்கூல் மேனேஜ்மென்ட்டும் ரொம்பவே ஹெல்ப் பண்ணிருக்காங்க. ஷோ முடிச்சுட்டு வந்தா நித்யாவுக்கு மட்டும் தனியா பரீட்சை வைச்சு ஸ்கூல்லயும் நித்யாக்கு முழு சப்போர்ட் கொடுத்து இருக்காங்க. 9 வது படிக்கும் வரை அவங்களுக்கு ஸ்கூல்ல நண்பர்கள் கூட இல்லையாம். 10-வது படிக்கும்போது தான் ஸ்கூல் லைஃப் இப்படி தான் இருக்கும்னு தெரிஞ்சு இருக்கு.

திரும்பவும் 11 படிக்கும் போது லீவு போட்டு பல ஸ்டேஜ் ஷோ-க்கு போய் இருக்காங்க. நித்யஸ்ரீ பாடாத மேடைகளே இல்லை. 200 மேற்பட்ட ஸ்டேஜ் ஷோஸ் பண்ணி இருக்காங்க. இது இல்லாம ஒரே வருஷத்துல 15 நாடுகளுக்கு போய் ஷோஸ் பண்ணி கொடுத்து இருக்காங்க. நித்யஸ்ரீக்கு இவ்ளோவும் பண்ணக் கூடவே இருந்து சப்போர்ட் பண்றது அவங்க அப்பா, அம்மா தான். கூடவே நித்யஸ்ரீ-யோட அக்கா வைஜயந்தியும் பாட்டு பாட சொல்லி கொடுப்பாங்களாம். ஏன்னா அவங்களும் ஒரு சிங்கர் தான்.சூப்பர் சிங்கர்லயும் பாடி இருக்காங்க.
நித்யாவுக்கு கர்நாடக சங்கீதம் மேல ஆர்வம் அதிகம், முறையாக பயிற்சி எடுத்துகிட்டதால, வெஸ்டர்ன் மட்டும் இல்லாம, கார்நாடக சங்கீதம் பாடும் பல மேடைகளில் இசை கச்சேரிகளும் பண்ணிட்டு வர்றாங்க. இவ்ளோ தானா அப்படின்னு கேட்டா இல்லை, இசையை நான் கை விட மாட்டேன், ஆன இசை என்னை கை விடலாம் சொல்ற நித்யா, படிப்பும் முக்கியம்ன்னு எம்.ஓ.பி வைஷ்ணவா காலேஜ்ல எம்.எஸ்ஸி எலெக்ட்ரானிக்ஸ் மீடியா கோர்ஸும் முடிச்சு இருக்காங்க.
Subscribe Tamilnadu Now Youtube channel for more entertaining videos
ஸ்டேஜ்ல பாடிட்டு இருந்த நித்யஸ்ரீ 10 வயசுலையே யுவன் ஷங்கர் ராஜா சினிமாவில் பாடும் வாய்ப்பையும் கொடுத்து இருக்காரு, அவன் இவன் பாடத்தில் ‘ஒரு மலையோரம்’ பாடலை பாடி இருக்காங்க. அதுக்கு அடுத்து இவங்க சிங்கர் பிரதீப் குமார் கூட சேர்ந்து பாடிய கோடி அருவி பாடலும் ஹிட் அடிச்சது.
நித்யஸ்ரீ-க்கு சினிமாவில் பாடுவது இல்லாம, தானே மியூசிக் கம்போஸ் பண்ணனும், மியூசிக் வீடியோ எடுக்கணும்னு ரொம்ப ஆசை, சரி ஒரு யூடியூப் சேனல் ஸ்டார்ட் பண்ணலாம்னு Get Nithyafied-கிற சேனலை ஸ்டார்ட் பண்ண 3 வருஷத்துல ரொம்ப குறைவான வீடியோஸ் போட்டாலும் ரசிகர்கள் கொடுத்த சப்போர்ட்ல 1 மில்லியன் சப்ஸ்கிரைபர்ஸோட இப்போ Sway சுந்தரியாக யூடியூப்ல அசத்திட்டு இருக்காங்க.
வித்தியாசமா ஒரு மேஷ் அப் பண்ணலாம்னு பிளான் பண்ணி 15 பாடல்களை வெச்சு 15-க்கும் மேற்பட்ட மொழிகளில் பாடி இவங்க ரிலீஸ் பண்ண சாங் 108 மில்லியன் வியூஸை கடந்து யூடியூபில் டிரெண்ட் ஆச்சு. இது ஹிட் அடிச்சதுனால ஆடியன்ஸ் விரும்பிய பாடல்களையெல்லாம் கேட்டு 2 பார்ட் மேஷ் அப் வீடியோவும் 13 மொழிகளில் பாடி ரிலீஸ் பண்ணி இருக்காங்க. இது இல்லாம அவங்க சேனலில் பல vlog டைப் வீடியோக்களையும் பண்ணிட்டு வர்றாங்க. ரிசெண்ட்டா நடந்த யுவன் ஷங்கர் ராஜாவோட மியூசிக் கான்சர்ட்லயும் பாடி அசத்திட்டாங்க நித்யாஸ்ரீ.
9 வயதில் சூப்பர் சிங்கரில் மேனாமினுக்கியா இருந்த நித்யஸ்ரீ இன்னைக்கு ஸ்டேஜ்ல ஒரு ராக்கிங் ஸ்டாராக கலக்கிட்டு இருக்காங்க. பல்வேறு நாடுகள், பலவித மியூசிக் ஷோ-ன்னு இது எல்லாமே நித்யாவுக்கு 23 வயதில் சாத்தியமாகி இருக்கு. அவங்க ஆசைப்பட்ட மாதிரி இன்னும் பல மேடைகளில் பாடி இசைத் துறையில் மறக்க முடியாத பாடகியாக நித்ய இருப்பாங்க-ன்னு நிச்சயம் சொல்லலாம். உங்களுக்கு நித்ய பாடிய எந்த பாட்டு பிடிக்கும்னு கமெண்ட்ல சொல்லுங்க.
To Know more about Tamilnadu Now Golden Carpet Awards
Also Read – க்ரிஞ்ச் அசீம் ஏன் பிக்பாஸ்ல இருந்து வெளியேற்றப்படணும்?
0 Comments