தமிழகத்தில் பிரபலமான நிறைய யூ டியூப் சேனல்கள் இருக்கின்றன. அவற்றுள் சோலோவாக நின்று மில்லியன் சப்ஸ்கிரைபர்களைப் பெற்று கெத்து காட்டும் யூ டியூபர்களின் லிஸ்ட் மற்றும் அவர்களின் லேட்டஸ்ட் வீடியோக்கள் இதோ…
Also Read : இந்தியாவின் டாப் 10 சோலோ யூ டியூப் கிரியேட்டர்ஸ்!
-
1 Madan Gowri
யூ டியூபின் விக்கிபீடியா என்று அழைக்கப்படும் மதன் கௌரியின் சேனல்தான் தமிழகத்தில் சோலோ யூ டியூபர்களில் அதிகம் சப்ஸ்கிரைப் செய்யப்பட்ட சேனல். சுமார் 4.83 மில்லியன் சப்ஸ்கிரைபர்கள் இந்த சேனலுக்கு உள்ளனர். மோட்டிவேஷன் வீடியோ, Vlog -னு எல்லா டாப்பிக்லையும் வீடியோ போட்டு தள்ளுவாரு, மதன் கௌரி. வீடியோ வெளியிட்டு சில மணி நேரங்களிலேயே லட்சக்கணக்கான பார்வையாளர்களை இவருடைய வீடியோக்கள் பெற்றுவிடும். விக்கிபீடியால இருந்து அப்படியே காப்பி அடிக்கிறாருனு இவர் மேல பல விமர்சனங்களும் வைக்கப்பட்றது உண்டு. எனிவே,`இன்ஃபர்மேஷன் இஸ் வெல்த்!’
-
2 Madras Samayal
`நாவின் சுவை அரும்புகள் மலரட்டும்’ அப்டினு நம்மள வரவேற்கக்கூடிய சேனல்தான் `மெட்ராஸ் சமையல்’ சேனல். சின்ன வயசுல இருந்தே சமையல் மீது ஆர்வம் கொண்ட ஸ்டெஃபி அம்மாக்கிட்ட கத்துக்கிட்ட சமையல், அத்தைக்கிட்ட கத்துக்கிட்ட சமையல்னு கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் இறக்கி ஆரம்பிச்ச சேனல்தான் `மெட்ராஸ் சமையல்.’ வெஜ், நான் வெஜ், ஸ்வீட்னு எல்லா ரெசிப்பிக்களையும் அட்டகாசமா நமக்கு சொல்லித் தராங்க ஸ்டெஃபி. இவங்களுக்கு சுமார் 4.28 மில்லியன் சப்ஸ்கிரைபர்கள் இருக்காங்க.
-
3 Minutes Mystery
மிஸ்ட்ரியான விஷயங்களைத் தேடித்தேடிப் போய் பாப்பீங்களா நீங்க? அப்போ உங்களுக்கான சேனல்தான் இந்த `Minutes mystery’. ``இந்த உலகத்துல எல்லாமே இயல்பானது இல்ல. நம்மைச் சுற்றி பல மர்மங்கள் மறைஞ்சிருக்கு. அந்த மர்மங்களைத் தேடி எடுத்து உங்களுக்கு சொல்றோம்னு” மர்மமான விஷயங்களை திகிலான குரல்ல நமக்கு சொல்றவங்கதான் சிவா மற்றும் மாயா. போடுற எல்லா வீடியோக்களும் செம ஹிட்தான். மினிட்ஸ் மிஸ்ட்ரி ஆர்மிலாம் இருக்குனா நீங்களே இவங்களோட மவுஸ பாத்துக்கோங்க. இவங்களுக்கு சுமார் 3.83 மில்லியன் சப்ஸ்கிரைபர்கள் இருக்காங்க.
-
4 TAMIL TECH - தமிழ் டெக்
``நம் தமிழ் மொழியில் ஒரு பெரிய வளமான டெக் குழுவிற்கு அன்புடன் வரவேற்கிறேன்”னு வணக்கம் போட்டு நம்மள வரவேற்கும் சேனல்தான் தமிழ் டெக். உலகத்துலயே நம்பர் 1 தமிழ் டெக்னாலஜி சேனல் இதுதாங்க. இதுவரைக்கும் சுமார் 2.64 மில்லியன் சப்ஸ்கிரைபர்கள் இவங்களுக்கு இருக்காங்க. டெக்னாலஜி பத்தின எல்லா தகவல்களையும் டைமிங்க்ல டெலிவர் பண்றதுல தமிழ் டெக் தமிழ் செல்வன் வேற லெவல். "வாழ்க தமிழ், வளர்க டெக்னாலஜி!"
-
5 RishiPedia
பேய், பிசாசு, அமானுஷ்யம்னு உலகத்துல நடந்த திகிலான சம்பவங்களைத் தேடி அதோட பின்னணி கதைகளையெல்லாம் தெரிஞ்சுகிட்டு நமக்கு ஃபன்னியா டெலிவர் பண்ற சேனல்தான் `Rishipedia.' இதுவரைக்கும் 2.47 மில்லியன் சப்ஸ்கிரைபர்கள் இந்த சேனலுக்கு இருக்காங்க. இவரோட ஒவ்வொரு வீடியோவுக்காகவும் இவரோட ஃபாலோவர்ஸ் வெறித்தனமா வெயிட்டிங்ல இருப்பாங்க. ஏன்னா... வெல்கம் டு ரிஷிபீடியானு அவர் சொல்றதே அவ்வளவு திகிலா அதேநேரம் அவ்வளவு ஃபன்னியாவும் இருக்கும்.
-
6 Jump Cuts
கமல்ஹாசன், விக்ரம்க்கு அப்புறமா அதிக கெட்டப் போட்டு நடிச்சது நம்ம ஜம்ப் கட்ஸ் ஹரி பாஸ்கர்தான். சட்டைய வச்சே கெட்டப்ப மாத்துவாருனா பாத்துக்கோங்களேன். பக்கா என்டர்டெயின்மென்ட் சேனல்னாலும் அது ஜம்ப் கட்ஸ்தான். ஏரியா லோக்கல் கைல இருந்து கிரிக்கெட் சூப்பர் ஸ்டார் வரைக்கும் எல்லாருமே இவரோட கன்டென்ட். ஈஸியா ரிலேட் பண்ணிக்கிற இவரோட வீடியோஸ பாக்கவே அவ்வளவு எனர்ஜியா இருக்கும். இதுவரைக்கும் 2.2 மில்லியன் சப்ஸ்கிரைபர்கள் இந்த சேனலுக்கு இருக்காங்க. பட்டய கிளப்புங்க பாஸ்!
-
7 Cyber Tamizha - சைபர் தமிழா
டெக்னாலஜி பத்தி தமிழ்ல அதிகமா பேசுற சேனல்ல சைபர் தமிழாவும் ஒண்ணு. இதுவரைக்கும் சுமார் 2.12 மில்லியன் சப்ஸ்கிரைபர்கள் இந்த சேனலுக்கு இருக்காங்க. ``எனக்கு டெக்னாலஜி பற்றி கற்க மிகவும் பிடிக்கும் இன்னும் கற்கிறேன், கற்பேன், கற்றுகொடுப்பேன்”னு பாஸிட்டிவ் வைப்ஸோட நம்மள வெல்கம் பண்ணும் சுகைல் ஆப்ஸ் ரிவியூ, அன்பாக்ஸிங், கேட்ஜட் ரிவியூ, டிரிக்ஸ், ஹேக்ஸ்னு ஏகப்பட்ட கன்டென்டுகளை அள்ளி தெளிப்பாரு.
-
8 Irfan's view
பெருசா அறிமுகமே தேவையில்லாத ஒரு சேனல்னா அது இர்ஃபான்ஸ் வியூ சேனல்தான். உலகத்துல பல நாடுகளுக்கும் சுற்றி அங்க இருக்குற பிரபலமான உணவுகளை சாப்ட்டு ரிவியூ பண்ணுவாரு இர்ஃபான். மேன் vs வைல்ட் பேர் கிறில்ஸ்க்கு அடுத்தபடியா முதலை, பாம்புனு பல வெரைட்டு உணவுகளை டேஸ்ட் பண்ணது இவருதான். இதுவரைக்கும் 2.04 மில்லியன் சப்ஸ்கிரைபர்கள் இவருக்கு இருக்காங்க. சமீபத்துல கூட பி.எம்.டபிள்யூ வாங்கி ரசிகர்கள் தொல்லையால வித்துட்டாரு. அவ்வளவு ரசிகர்கள் இவருக்கு இருக்காங்க. ஃபுட் மட்டுமில்லால நிறைய vlogs வீடியோவும் போடுவாரு. இன்னும் என்னலாம் சாப்பிடப் போறாருனு காத்திருந்து பார்ப்போம்.
-
9 Prankster Rahul
`என்னா அடி!’ அப்டினு நம்மளே நினைக்கிற அளவுக்கு அடி வாங்கி பிராங்க் பண்ற ஒரு ஆளுதான் ராகுல். ஏகப்பட்ட கெட்டப்புகள போட்டு கைல மாட்டுறவங்கள செமயா கடுப்பேத்துற பிராங்க்ஸ்டர் ராகுலோட சேனலுக்கு இதுவரை 1.33 மில்லியன் சப்ஸ்கிரைபர்கள் இருக்காங்க. அவரு கடுப்பேத்துறத பாத்து நமக்கே கடுப்பாகும் சில நேரங்கள.. அவ்வளவு ஷார்ப்பா வேலை செய்றவரு ராகுல். நல்லா பண்றீங்க ப்ரோ.
-
10 Ram with jaanu
கப்புளா சேர்ந்து யூ டியூப்ல கலக்கிட்டு இருக்குறவங்கதான் இந்த ராமும் ஜானுவும். பேர சொன்னதும் 96 நியாபகம் வருதுல. ஆனா, இவங்க சேனல பார்த்ததுக்கு அப்புறமா உங்களுக்கு இவங்க பண்ற ஃபன் மட்டும்தான் நியாபகம் வரும். இதுவரைக்கும் 1.21 மில்லியன் சப்ஸ்கிரைபர்ஸ் இவங்க சேனலுக்கு இருக்காங்க. நிறைய vlogs இவங்க ஃபன்னா பண்ணுவாங்க. யமுனை ஆற்றிலே ஈரக்காற்றிலே...
0 Comments