ஸ்மார்ட்போன்கள் இல்லாத நிலையை நினைத்தே பார்க்க முடியாத சூழலில் நான் இன்றைக்கு இருக்கிறோம். பெண்கள் தினசரி 600 நிமிடங்கள் வரை போனைப் பயன்படுத்துவதாகச் சொல்கிறது ஒரு ஆய்வு. அதேபோல், ஆண்களின் தினசரி போன் பயன்பாடு என்பது சராசரியாக 459 நிமிடங்கள் என்றும் தரவுகள் இருக்கின்றன. நாம் பெரும்பாலும் இ-மெயில் அனுப்புவது, சமூக வலைதளங்களை அலுவலகரீதியாகப் பயன்படுத்துவது போன்றவற்றுக்காக போனைப் பயன்படுத்தினாலும், பெர்சனல் அக்கவுண்டுகளில் வெறும் சஃர்பிங்குக்காகத்தான் அதிக நேரத்தை போனுடன் செலவிடுகிறோம்.
உங்கள் போன் யூஸேஜ் உங்களைப் பற்றி சொல்லிவிடும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். செக் பண்ணலாமா?
Also Read – இந்த 7 விஷயங்களை நீங்கள் கூகுளில் தேடக் கூடாது… ஏன்?
-
1 உங்க போன் ஒருநாளைக்கு எத்தனை முறை பேட்டரி லோ என்கிற நிலைக்குப் போகும்?
-
ஒரு தடவைக்கு மேல
-
ஒரு தடவைதான்
-
பேட்டரி லோவுக்கே போக விடமாட்டேன்
-
-
2 எவ்வளவு நேரத்துக்கு ஒருதடவை உங்க போனை செக் பண்ணுவீங்க?
-
ஒரு நிமிஷத்துக்கு ஒண்ணு, ரெண்டு தடவையாவது செக் பண்ணிடுவேன்
-
ஒரு மணி நேரத்துக்கு ஒரு தடவை
-
பல மணி நேரம் கூட செக் பண்ணாம இருந்ததுண்டு
-
-
3 ஒரு தடவை போனை எடுத்தால் குறைந்தபட்சம் எவ்வளவு நேரம் தொடர்ச்சியா யூஸ் பண்ணுவீங்க?
-
நேரத்தை கரெக்டா சொல்ல முடியாது
-
குறைஞ்சது அரை மணி நேரமாவது யூஸ் பண்ணுவேன்
-
நோட்டிபிகேஷன் செக் பண்ணிட்டு வைச்சுடுவேன்
-
-
4 நள்ளிரவுக்கு மேல போன் பயன்படுத்துவீங்களா?
-
பல நேரங்கள்ல அதுதான் வழக்கம்
-
எப்போதாவது உண்டு
-
நள்ளிரவு தாண்டி கண்டிப்பா யூஸ் பண்ண மாட்டேன்
-
-
5 உங்க போனை சார்ஜ் போட்டபடியே யூஸ் பண்ணுவீங்களா?
-
பலமுறை அப்படிப் பண்ணியிருக்கேன்
-
ரொம்பவும் ரேரா அவசரம்னா மட்டும் பண்ணுவேன்
-
போன் சார்ஜ் ஆகுற வரைக்கும் வெயிட் பண்ணுவேன்
-
-
6 நோட்டிபிகேஷன் எல்லாத்தையும் செக் பண்ணுவீங்களா?
-
எந்த நோட்டிபிகேஷன் வந்தாலும் உடனே பார்த்துடுவேன்
-
எப்பவாவது பார்ப்பேன்
-
டைம் கிடைக்கும்போது மட்டும்தான்
-
-
7 ஒரு நாளைக்கு எவ்ளோ கால்ஸ், மெசேஜஸ் வரும் உங்களுக்கு?
-
கணக்குலாம் பண்ண முடியாதுங்க
-
குறைந்தபட்சம் 10 கால் - 20 மெசேஜுக்கு மேல வரும்
-
ரொம்பலாம் வராதுங்க
-
உங்க போன் யூஸேஜ் உங்களைப் பத்தி சொல்லிடும்... செக் பண்ணலாமா?
Created on-
Quiz result
பாஸ் உங்க போன் யூஸேஜ் ரொம்பவே அதிகம்... சூதானமா இருங்க
நீங்க மன அழுத்தத்தால் பாதிக்கப்பட அதிக வாய்ப்பு இருக்கு. சோ போன் யூஸேஜைக் கொஞ்சம் குறைச்சுக்கிறது நல்லது. போன் இல்லாம இருக்கவே முடியாது என்கிற நிலைமைல நீங்க இருக்கீங்க... பத்திரம் பாஸ்.
-
Quiz result
உங்க போன் யூஸேஜ் மாடரேட் லெவல்ல இருக்கு பாஸ்!
போனோட முக்கியத்துவத்தை சரியா புரிஞ்சு வைச்சுக்கிட்டு யூஸ் பண்ணிட்டு இருக்கீங்க. உங்க டெய்லி போன் யூஸேஜ் நேரம் கூடாமப் பார்த்துக்கோங்க.
-
Quiz result
மாஸ்தான் பாஸ் நீங்க!
தேவைதான் போன் யூஸேஜை முடிவு பண்ணும்னு நம்புற ஆள் நீங்க. வாழ்த்துகள் பாஸ்!
0 Comments